மூங்கில் அரிசியின் பயன்கள்
மூங்கில் அரிசியின் பயன்கள். Benefits of Bamboo Rice
சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாகி போனவர்களை, மறுபடியும் சீரான உடல் அமைப்பை பெற செய்யும் இந்த மூங்கில் அரிசி.
மூங்கிலரிசி, தினையரிசி, ஆகியவற்றை 100 கிராம் எடுத்து அரைத்து மாவுபோல் செய்து கொள்ளவும். இந்த மாவில் இருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து கஞ்சிபோல் செய்து தினமும் குடித்து வர உடல் வலிமையடையும், சக்கரையை நோயை கட்டுப்படுத்தும்.
இந்த மூங்கில் அரிசியில் தினமும் கஞ்சி வைத்து சாப்பிட்டு வர மூட்டு வலி, முட்டியில் நீர் கோர்த்துக்கொள்ளுதல், முதுகு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகள் சரியாகிவிடும்.
உடல் எடை குறைய, தொப்பை குறைய மூங்கில் அரிசியை வாரத்தில் இரண்டு முறை பொங்கலாகவோ அல்லது கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்படுகிது. இதனால் உடல் எடை மற்றும் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
குழந்தையின்மை பிரச்சனை உள்ளவர்கள் இந்த மூங்கில் அரிசியை தினமும் காலையில் கஞ்சியாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர இந்த குழந்தையினமை பிரச்சனை சரியாகும்.
இந்த மூங்கில் அரிசியில் செய்த கஞ்சியை சாப்பிடுவதால் பசியை குறைக்கும், உடலில் ஆற்றலை பெருக்கும்.
இந்த மூங்கில் அரிசியானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை உடையது. அதனால் கர்ப்ப கால பெண்கள் விரும்பும் வகையிலான மூங்கில் அரிசி உணவுகளை செய்து சாப்பிடலாம்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும் சக்தி மூங்கில் அரிசிக்கு உள்ளது.
Comments
Post a Comment