60' 70' களில்  பிறந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்!



இவை அனைத்திற்கும் இல்லை என்பதே பதிலாகும்.


 அம்மா  காலை 5 மணிக்குமேல் உறங்கியதை பார்த்ததுண்டா?


இல்லை


 நீங்கள் காலை உணவு சாப்பிடாமல் உங்களை பள்ளிக்கு அனுப்பியதுண்டா?


இல்லை


வீட்டு சமையலை விட்டு ஹோட்டலில் அதிகம் சாப்பிட்டதுண்டா?


இல்லை


வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்ததுண்டா?


இல்லை


மார்கழி மாதத்தின் அதிகாலை பொழுதில் தெரு அடைத்த கோலம் இல்லாத வாசல் இருந்ததுண்டா?


இல்லை


அம்மா, அப்பாவை பெயரைச்சொல்லி  அழைத்ததுண்டா?


சத்தியமா இல்லைங்க


அத்தை, சித்தப்பா, பெரியப்பா, உறவுகள் வருவதும், போவதும் இல்லாத வெறிச்சென்ற தனிவீடு எங்காவது இருந்ததுண்டா? 


இல்லை


அம்மா சமைப்பதற்கு எப்பவாவது முகம் சுளித்ததுண்டா?


இல்லை


விளையாடும் பிள்ளைகள், கதைபேசும் அம்மணிகள் இல்லாத வெறிச்சென்ற தெருக்கள் இருந்ததுண்டா?


இல்லை


 வீடுகளில் நாள் முழுவதும்  தொலைக்காட்சியின் தொல்லை ஒலிகள் எப்போதும் கேட்டதுண்டா?


இல்லை


ஆசிரியரைக் கண்டால் பயப்படாமல் எதிரில் நின்று பேசியதுண்டா?


இல்லை


பெற்றோரை எதிர்த்துப் பேசியதுண்டா?


இல்லை


மாணவிகள், மாணவருடன் தனியாக நின்று பேசியதுண்டா?


இல்லை


வீடு கட்டுவதற்கு தண்ணீர், மண், மணல் போன்றவற்றை காசு கொடுத்து வாங்கியது உண்டா?


இல்லவே இல்லை.


இதைப் போன்ற எத்தனையோ இல்லைகள் இருந்ததால், சமுதாயம் பண்பட்டதாய்  மகிழ்ந்தது.


Comments