Stockholm syndrome
தமிழ்நாட்ல 234 தொகுதி இருக்கு, இதுல 118 தொகுதி ஜெயிக்கற கட்சி அல்லது கூட்டணிதான் ஆட்சி அமைக்க முடியும் ஆட்சி அமைஞ்சதுக்கப்றம் அவங்க எடுக்கற முடிவுகளத்தான் இந்த நாடே ஏத்துக்க முடியும் 118 -ங்றது இங்க மெஜாரிட்டி அதாவது 50%க்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான் -
நாட்டோட முதல் குடிமகன் ஜனாதிபதி முதல் பிரதமர், முதலமைச்சர் ஏன் ஒரு பேரூராட்சி, ஒன்றிய தலைவர் கூட இந்த மெஜாரிட்டிய வெச்சுதான் முடிவு பண்ணுவாங்க_
நாடாளுமன்றம், சட்டமன்றங்கள்ல கொண்டுவர்ற சட்டங்களக் கூட அங்க இருக்கற மெஜாரிட்டிய வச்சுதான் முடிவு பண்ணுவாங்க_
ஆனா, 75 வருஷமா இங்க இருக்கற மெஜாரிட்டி ஹிந்துக்களளோட உணர்வுகளையே மதிக்காத, உணர்வுகளை மட்டுமல்ல நம்பிக்கைகளை சிதைத்தும், காயப்படுத்தியும் வரும் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது, துரதிஷ்ட வசமாக அந்தப் பெருங்கூட்டத்திற்கு உலகிலேயே பெரிய ஆழ்வார்களும், நாயன்மார்களும் அவதரித்த, 264 சிவாலயங்களும், 97 வைணவ ஸ்தலங்களும் உலகின் மிகப்பெரிய முதல் 10 கோவில்களில் 6 கோவில்களைத் தன்னகத்தே கொண்ட தமிழத்தில்தான் மிக, மிக அதிகமான ஆதரவு-
இந்த முரண்பாடு எனக்கு முதலில் புரியவேயில்லை, இப்பொழுது தெளிவாகப் புரிகிறது -
இதை Stockholm syndrome என்று கூறுவார்கள்-
அதாவது ஒருவரை ஒருவரோ, பலரோ சேர்ந்து பணத்திற்காகவோ, அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவோ கடத்துவர், கடத்தப்பட்டவர் ஹோஸ்டேஜாக இருக்கும் காலகட்டத்தில் கடத்தல்காரர்களின் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்பவைக்கப்பட்டு அவர்களுக்கு ஆதரவாகவே மாறிவிடுவார்கள், இதைத்தான் Stockholm syndrome என்று கூறுவார்கள்-
மிக, மிக, இளகிய மனம் படைத்த, எளிதாக உணர்ச்சிவயப்படக் கூடியவர்களை இதுபோன்று எளிதில் ஏமாற்றிவிட முடியும் -
அதில் நம்பர் 1 நமது தமிழர்கள்-
தமிழ்லதான் ஒரு பழமொழி இருக்கு "சிரிச்சு பேசினா சேலையக் கூட கொடுத்துடுவா"ன்னு, அவ்வளவு அப்பாவிகள் தமிழர்கள்-
புகழ் போதைக்கு அடிமையான தமிழர்களை, மது, கஞ்சா போதைகளுக்கும் அடிமையாக்கினால் என்ன நடக்கும்?-
இன்றைக்கு தமிழகம் முழுவதும் வாத்தியான்களின் கேவலமான மறுபக்கம் ஏன் தொடர்ந்து வெளியாகிறது?-
இந்தக் கட்டுரைக்கும் வாத்தியான்களுக்கும் என்ன தொடர்பு?-
நான் படிக்கும் போதெல்லாம் வாத்தியார் ஒருவேளை நடந்து வரும்போது நான் சைக்கிள்ள போய்கிட்டு இருந்தா ஓடனே கீழ இறங்கி அவருக்கு மரியாதை கொடுப்பேன், ஆனால் இதெல்லாம் மாறி பல வருடங்களாகிவிட்டன-
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று எழுதிதான் நாம் இரட்டை வரி நோட்டில் தமிழே எழுதிப்பழகினோம் -
ஆனால், இன்று மாதா என்றால் வேளாங்கண்ணி மாதா என்றும், பிதா என்றால் பரிசுத்த ஆவி என்றும் மிஷநரிகள் நம்மை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள் -
இன்று 9 வயது சிறுவன் கஞ்சாவைக் குடித்துவிட்டு ஒரு போலீஸ்காரரை வெட்டுகிறான் என்றால் அதற்குக் காரணம் இந்தக் கலாச்சார சீரழிவே -
இதற்குத் தீர்வுதான் என்ன?-
முதலில் இந்த மண்ணின் கலாச்சாரங்களை, பண்பாட்டை, இதிகாசங்களை நமது இளைய சமுதாயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் -
முதலில் பகவத்கீதையின் 18 அத்தியாயங்களையும் 12 வருட பள்ளிப்பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும், பகவத்கீதை படித்தவன் பகவானின் பக்தனாவேனே தவிர பாதை மாற வாய்ப்பில்லை-
இரண்டாவதாக, தமிழில் இருக்கும் தெய்வீக பாடல்களை பாசுரங்களை, குறிப்பாக தெய்வப்புலவரின் குறள்களை 18 வயதிற்குள் நமது இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டும் -
பிறகு பாருங்கள் தமிழகத்தை_
உலகிற்கே ஒளியூட்டும் எங்கள் தமிழ்ச்சமூகம் -
இதெல்லாம் அன்னிய மத தலையீடுகள் இல்லையென்றால் அருமையாக நடக்கும் -
Comments
Post a Comment