சிங்கப்பூர் பயணிகளுக்கு ஏர் சுவிதா இனி தேவையில்லை

சிங்கப்பூரிலிருந்து இந்தியா வரும் விமான பயணிகள் இனி ஏர் சுவிதா செய்ய வேண்டிய அவசியமில்லை என இந்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து விட்ட நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான 'ஏர் சுவிதா' நடைமுறை தேவையில்லை என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த நடைமுறை நேற்று (21.11.2022)நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. தேவைப்படும் பட்சத்தில் இந்த நடைமுறை மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments