மூட்டு வலி....
கொஞ்ச தூரம் கூட நடக்க முடியல !! ஒரே முட்டி வலி... நிமிர முடியல... குனிய முடியல என 40-ஐ தாண்டிய நமது பெற்றோர்கள் பலரும் கூற கேட்டிருப்போம்.
நமது மக்களை பொறுத்த மட்டில் ஒருவருக்கு முட்டி வலி என்றால் அவருக்கு கால்சியம் குறைபாடு உள்ளது என முடிவுசெய்து உணவில் பால், முட்டையை அதிகரித்தோ அல்லது தாமாகவே பார்மசி சென்று கால்சியம் மாத்திரைகளை வாங்கி உண்பர். அப்படி செய்வது சரியா என்பதை தாண்டி அவ்வாறு கால்சியத்தை அதிகமாக உண்பது மட்டுமே எலும்புகளை வலுப்படுத்துமா என்றால், இல்லை !!
உங்களுக்கு எளிதில் புரியும்படி கூறவேண்டுமென்றால், நமது எலும்பில் இருவித செல்கள் உள்ளன.
** OsteoBlasts மற்றும் OsteoClasts **
Osteoblast என்பது எலும்பை அடர்த்தியாகவும், வலுவாகவும் வளர உதவி செய்யும். இவை நமது ரத்தத்தில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் தனிமங்களை கொண்டு எலும்பை வளர செய்யும்.
Osteoclast என்பது எலும்பை அரித்து அதை பலவீனமாக்கும். இந்த Osteoclast அளவுகள் 45 வயதிற்கு மேல் அதிகரிக்கும். வயது ஆக ஆக மாதவிடாய் நின்ற பின்பு பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் குறையும்; ஆண்களுக்கு Testosterone குறையும். இருபாலருக்கும் Growth Hormone குறையும். இதனால், Osteoclast அதிகமாக உருவாகி எலும்பை அரித்து Osteoporosis என்னும் எலும்புபுரை உருவாகும்.
அப்போது, கால்சியம் அதிகமாக உட்கொண்டால் OsteoBlast எனப்படும் வளர்ச்சிக்கான செல் அதிகரிக்குமே என பலர் கால்சியம் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள்.
ஆனால், நாம் இங்கு மறக்கும் விஷயம் VITAMIN D3.
நாம் எவ்வளவு கால்சியம் உட்கொண்டாலும் அது உறிஞ்சபட வேண்டும். Absorption என்னும் நுகர்தல் நடைபெற வேண்டும். அதற்கு மிகமுக்கியமான தேவை Vitamin D3. விட்டமின் D3 இல்லாமல் எவ்வளவு கால்சியம் உட்கொண்டாலும் அது பெரிதாக பயன்தராது.
கால்சியம் நுகர்வு, எலும்பு வளர்ச்சியில் மட்டுமில்லாது தற்போதைய ஆராய்ச்சிகள் விட்டமின் D சர்க்கரை நோய் வருவதை தடுக்கும் என கூறுகிறது.
எனவே, விட்டமின் D3 -ஐ நாம் நிச்சயம் பெறவேண்டும்.
விட்டமின் D3 உணவில் கிடைக்காது. அது கிடைக்கும் ஒரே இயற்கை பொருள், சூரியஒளி. Vitamin D3- ஐ 'சூரிய ஹார்மோன்' என்று குறிப்பிடுவார்கள்.
தினசரி உச்சி சூரியஒளியில் 20 நிமிடங்கள் தோல் பெருமளவு படும்படி நின்றாலே நாம் Vitamin D3- ஐ பெறலாம். காலை 11.30 முதல் மதியம் 3 மணியில் நிற்பது சிறப்பு. இவ்வாறு, சூரியஒளியில் நின்று விட்டமின்-D3 யை பெற்று, உணவில் கால்சியத்தை தேவையான அளவு எடுத்துக்கொள்வதே எலும்புகளை வலுப்பெற செய்யும். அவ்வாறு நிற்கமுடியாத சூழல் உள்ளவர்கள் மருத்துவரை ஆலோசித்து விட்டமின் D3 மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். கால்சியத்தில் காட்டும் கவனத்தை விடவும் Vitamin D3-இல் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
நன்றி
Comments
Post a Comment