நோயின்றி வாழ....

 நோயின்றி வாழ...



காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கிச் சமைக்க வேண்டும். காய்கறிகளின் தோலை மிகவும் லேசாகச் சீவி எடுக்க வேண்டும்.உருளை கிழங்கு போன்றவற்றைத் தோலுடன் வேக வைத்துபின் தோலை நீக்குவது நல்லது. 


காலையில் ஆசனம் , மாலையில் உடற்பயற்சி ,இடைப்பட்ட நேரத்தில் தியானம் நாள்தோறும் செய்ய பழக வேண்டும் .ஆசனப் பயிற்சி உடலின் உள் உறுப்புகளை நலம் பெறச் செய்யும் ,உடற் பயிற்சி உடலின் புற உறுப்புகளை வலுபெற செய்யும். 


காலையில் இஞ்சி ,நண்பகல் சுக்கு ,மாலையில் கடுக்காய் ஆகியவற்றை சேர்த்து வந்தால் .வாதம் ,பித்தம் ,ஆகிய நோய்கள் இன்றி வாழலாம் . 


காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு எழுவதும் ,இரவில் சீக்கிரம் உறங்குவதும் நோய் தீர்க்கும் அன்றாட நடை முறைகள் ஆகும் . 


ஒரு நாளைக்கு இருவேளை உணவு உண்டால் போதும். நினைத்த பொழுது எல்லாம் உணவு உண்பதை தவிர்க்க வேண்டும் . 


பசித்து உணவு உண்ணவேண்டும் .சாப்பிடும் பொழுது இடை இடையே தண்ணீர் அருந்துவதை தவிர்ப்பதும் நல்லது . 


மலம் ,ஜலத்தை உரிய நேரத்தில் வெளியிடமால் அடக்கி வைப்பதை தவிர்ப்பது நல்லது .


புகையிலை சுருட்டு பொடி,முதலான தீய பழக்க வழக்கங்களை தவிர்ப்பதும் நல்லது .


வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்து இள வெந்நீரி ல் குளிக்க வேண்டாம் .மாதம் இரு முறை உண்ணா நோன்பையும் இருத்தல் நல்லது . 


கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெருந்தாகம் எடுத்தாலும் தண்ணீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் . 


அளவுக்கு அதிகமான உப்பு நோயைத் தருவாதகும் . உப்பு அது தப்பு என்பது இயற்க்கை மருத்துவர்களின் அறிவுருதலாகும் . 


காலையிலும் மாலையிலும் நடைப்பயிர்ச்சி மேற்கொண்டால் மருத்துவமனை நோக்கி நடப்பதை பெரும் அளவில் தவிர்க்கலாம் . 


உணவு வகைகளில் சோற்றைக் குறைவாகும் ,அதிகமாக கீரைகளையும் ,காய்கறிகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் . 


கீழ்க்கண்ட வேண்டாத மன உணர்வுகள் நீக்குவது நல்லது . காமம், பகை, பிறர்க்கு உதவாமை, நான் என்னும் கர்வம் , இருமணப் பெண்டிர் மீது பெரு விருப்பு, மனதளவில் விரதோம் ,பிறரை இகழ்தல் ,பொறாமை. 


உணவுக்கு பின் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, சுண்ணாம்பு சேர்த்து கொள்வது நல்லது வெற்றிலை உணவை விரைவாக செரிக்க செய்யும். பாக்கு நுரையிரலில் ஏற்படும் சளிதொல்லையை தீர்க்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு வலிமை சேர்த்து குடல் நோய்களை குணப்படுத்தும் . 


அதிக அளவு நீர், கீரை வகை உணவுகளும் ,பழவகைகளும் மலச்சிக்கலை தீக்கும் . நாட்பட்ட உணவை உண்ணக்கூடாது . 


ஆரோக்கியமாக, நோயின்றி வாழ பின்பற்ற வேண்டியவைகள் (ஒழுக்கமுறைகள்)


இதனை தொடர்ந்து செய்து வந்தால் எந்த நோயையும் குணப்படுத்திவிடலாம் நோயின்றியும் வாழலாம். 


உணவு சாப்பிடும் முறை: பசியில்லாத போது சாப்பிடக் கூடாது. 


பேசி கொண்டு, நின்று கொண்டு, புத்தகம் படித்து கொண்டு, செல்போன் பேசி கொண்டு டி.வி பார்த்து கொண்டோ, பாடல்கள் கேட்டு கொண்டோ சாப்பிடக் கூடாது. 


அம்மா தன் குழந்தைகளுடன் சாப்பிடக் கூடாது. உணவில் கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும் (உணவை வாயில் போட்டவுடன் கண்களை மூடி சாப்பிடலாம், விக்கல் வராது) .


கால்களை தொங்கவிட்டு கொண்டு அமர்ந்து சாப்பிடக் கூடாது. கால்களை மடக்கி சம்மனங்கால் போட்டு சாப்பிட வேண்டும். 


குளித்த பின் 45 நிமிடத்திற்கு பிறகு மட்டுமே சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பிறகு 2.30 மணி நேரத்திற்கு குளிக்கக் கூடாது. 


சாப்பிடுவதற்கு ½ மணி நேரம் முன்பும், பின்பும், சாப்பிடும் போதும் நீர் அருந்தக் கூடாது, சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் தேவைப்பட்டால் 3 முறை உள்ளங்கையில் நீரை உறிஞ்சி குடிக்கலாம்.(சிறிது நீர் குடிக்கலாம்) 


மாதம் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் 2 லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, பசி எடுக்கும் வரை எதையும் சாப்பிடக் கூடாது. 


தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும்.இரத்தம் ஓட இருதயம் உதவும். ஆனால் நிணநீர் ஓட உடல் உழைப்புத் தேவை.உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு நிண நீர் ஓட்டம் நன்றாக இருக்காது. இதுதான் பல நோய்களுக்கு காரணம்.

Comments