30 வருடங்களுக்கு முன்பு தீபாவளி....
30 வருடங்களுக்கு
முன்பு தீபாவளி எப்படி இருந்தது..??
.
.
ஒரே
ஒரு சீனிவெடி பாக்கெட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு வெடியாக எண்ணி எண்ணி வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!
.
தெரு
தெருவாக சென்று வெடிக்காத வெடிகளை பொறுக்கி வந்து
புதுரக வெடிகளை தானாக தயார் செய்தது - நினைவில் இருக்கிறது..!!
வெடிமருந்து
அப்பிய கையோடு சாப்பிட அமர்ந்து அம்மாவிடம் அடி வாங்கியது - நினைவில்
இருக்கிறது..!!
.
பேப்பரில்
வெடி மருந்துகளை மொத்தமாக சேர்த்து கொளுத்தும்போது ஏற்பட்ட தீக்காயம் - நினைவில் இருக்கிறது..!!
.
வெடி
வாங்கி வரும் அப்பாவின் வருகைக்காக வாசலில் வந்து
வந்து எட்டிப் பார்த்து சென்றது - நினைவில் இருக்கிறது..!!
.
வெடிகளை
கையில் பிடித்து எரிந்து பெரியவர்களிடம்
திட்டு
வாங்கியது - நினைவில் இருக்கிறது..!!
.
அண்ணே
வெடி இருக்கு, அக்கா வெடி இருக்கு என்று
ரோட்டில்
நடந்து வருபவர்களை ஓரமாக நடக்க வைத்து பயமுறுத்தியது - நினைவில்
இருக்கிறது..!!
.
பிடித்த
ஆடைகளை வாங்க முடியாமல் விலை குறைவான ஆடைகளை
வாங்கி, அப்பா அம்மாவிடம் கோபித்துக் கொண்டது - நினைவில் இருக்கிறது..!!
.
இன்னமும்
20 நாள் இருக்கிறது, இன்னமும் 10நாள் இருக்கிறது
என தீபாவளியின் வருகைக்காக நாட்களை எண்ணியது - நினைவில் இருக்கிறது..!!
.
அம்மா
அப்பா
தாத்தா
பாட்டி
மாமா
என அனைவரிடம் சேகரித்த தீபாவளி காசை கொஞ்சம் கொஞ்சமாக
வைத்து செலவு செய்தது - நினைவில் இருக்கிறது..!!
.
தீபாவளி
விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது புத்தாடைகளை அணிந்து சென்று பந்தா காட்டியது - நினைவில் இருக்கிறது..!!
.
அம்மா
ஒளித்து வைத்த பண்டங்களை யாருக்கும் தெரியாமல் திருடித் திண்றது - நினைவில் இருக்கிறது..!!
.
ஊதுபத்தி"க்கு பதிலாக கொசுபத்தியை
கொளுத்தி வெடிகளை வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!
.
ஒரு
பத்தி அனையப் போகிறது என்று தெரிந்ததும் இன்னொரு பத்தியை அதிலேயே ஒட்டி வைத்து ஊதி ஊதி எரிய
வைத்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
பாம்பு
மாத்திரைகளை வரிசையாக அடுக்கி மாடர்ன் ஆர்ட் போல கொளுத்தியது - நினைவில்
இருக்கிறது..!!
.
வெடிக்காத
லட்சுமி வெடிக்குள் சீனி வெடியை சொருகி பில்டப்
செய்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
சகதிக்குள்
வெடிகளை அமுக்கி வைத்து வெடித்தது - நினைவில் இருக்கிறது..!!
.
மொட்டை
மாடியில் நின்றுகொண்டு ஆங்காங்க வெடிக்கும் வானவேடிக்கைகளை
பார்த்து கைதட்டி ரசித்தது - நினைவில் இருக்கிறது..!!🤔
.
வெடி
பாக்கெட்களை கையில் பிடித்துக்கொள்ள அசிஸ்டென்ட்டை வைத்தது - நினைவில் இருக்கிறது..!!
.
.
முப்பது
வருடங்களுக்கு முன்பு நாங்கள் கொண்டாடிய தீபாவளியை இப்போதைய சிறுவர்களும் இளைஞர்களும் கண்டிப்பாக கொண்டாட முடியாது..!!
.
இப்போதைய
தீபாவளி குடிப்பதற்கும், டிவியின் சிறப்பு நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கும், புதிய படம் பார்ப்பதற்கு மட்டுமே..!!
.
ஆனால்
எங்களுடைய நாட்கள் (அப்போதைய 80,90,களின் தீபாவளி ) என்றும் காலத்தால் மறக்க முடியாதவை...!
Comments
Post a Comment