சின்ன வீடு....
எனது பேத்தியிடம்,சிறுவயதில் நான் வாழ்ந்த
எங்க தாத்தா காம்பவுண்ட் வீட்டை காட்டினேன்!
அதப்பாத்து பெரும் வியப்படைஞ்சா,,
தாத்தா,,! இந்த சின்ன வீட்டுலயா,,நீ இருந்தே,,?
ஆச்சியை கல்யாணம் பண்ணிய பின்னுமா இங்கே
இருந்தே,,அம்மா இங்கயா விளையாடுவா,,!?
அப்பா,,இங்க படுத்துத்தூங்கவே இடமில்லை,,
விளையாடவும் இடமில்லைன்னு அவ ஒருநாளும் சொன்னதே இல்லம்மா,,!💕
உன் அம்மா,10 வயசுவர,இங்கதான் வளர்ந்தா,,
இந்த சின்ன இடத்துல,ஓடி,புடிச்சு விளையாடுவா
இந்த சின்ன இடத்துல சைக்கிள் பழகினா,,!💕
நீயோ,பிறந்ததில இருந்து,ரொம்ப பெரிய வீட்டுல
வளர்றம்மா,,அதனாலதான்,நாங்க வாழ்ந்த இந்த
சின்ன வீட்டை உனக்கு காமிச்சேம்மா,,😇
நம்ம இருக்கிற வீடு குடிசையோ,பங்களாவோ
அது முக்கியமில்லைம்மா,,எல்லோர்ட்டயும் நாம அன்பா பழகி,அனுசரிச்சுப்போறதே முக்கியம்மா!
நாளைக்கு,நீ,,உன் அம்மா போல,எல்லோரிடமும்
அன்பா பழகணும்மா,,யாரோடையும் நீ சண்டை
போடக்கூடாதம்மா,அனுசரிச்சு போகணும்மா,💕
பிறரைப்பாத்து பொறாமைப்படவே கூடாதம்மா,,!
உன் அம்மா எந்த டியூஷனும் இல்லாமலேயே,அவ
சக்தி விநாயகர் ஸ்கூல்ல பஸ்ட் ரேங்க் வாங்குவா
அதுவும் இந்தசின்ன வீட்டுலஇருந்து படிச்சுமா👏
அதனால ரொம்ப பெரிய வீட்டுல வளர்றதுன்னால
உனக்கு எந்தப்பெருமையும் வராதம்மா,,உனக்கு
தலைக்கனமும்,திமிறும் வந்துரும்மா,,😲
உன் அம்மா மாறி,நீ வரணுங்கிறதுக்காகத்தான்,,
உன்னோடு நான் இருந்து வழிகாட்டுறேம்மா,,
உன் தாத்தாவோட கடமையும் அதுதாம்மா,,
உன் அம்மா மாறி,நீ வாம்மா,,உன்னை பாத்து
உன் தம்பியும் அம்மா மாறி வருவாம்மா,,💕
உன்னோட தாத்தாவோட கடைசி ஆசை இந்த
உலகத்துல உண்மையிலே இதுதாம்மா,,💕
Comments
Post a Comment