ஏழைகளின் பொருளாதார எழுச்சியே எதிர்காலத் தேசத்தின் வளர்ச்சி.
தமிழக அரசு கடந்த 40 ஆண்டுகளில் எந்த கட்சி ஆட்சியானலும் சரி ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
அதன்படி கணக்கிட்டால் தற்போது ஏழை என்ற வர்க்கமே இல்லாமல் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இப்போதும் ஏழைவர்க்கம் என்ற நிலை தொடந்தே வருகிறது.
காரணம் "ஏழைகள் பயன்பெறட்டும்" என வகுக்கப்பட்ட திட்டங்கள் யாவும் ஏழை மக்களிடம் முழுவதுமாக சென்றடைந்தாத என்பது கேள்விக் குறியே?.
ஏழைகளின் வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட திட்டங்களின்
60% அரசியல்வாதிகளிடமும்,அரசு அதிகாரிகளிடமும் சென்றடைந்துள்ளது.
அதனாலதான் ஏழைமக்கள் ஏழைகளாகவே வாழ்கின்றனர்.
குறிப்பாக கடந்த காலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி சுமார் 60ஆயிரம் கோடிகளை தாண்டியது.ஆனால் ஆயிரம் கோடிகள்கூட ஏழை விவசாயிகளை சென்றடையவில்லை.அனைத்தும் பணக்கார விவசாயிகளிடமும்,நிலச்சுவான்தார்களிடமும் சென்றது.
அதனால்தான் ஏழை மக்கள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
ஏழைகள் வாழட்டும்.
ஏழைகளை வாழ விடுவோம்.
Comments
Post a Comment