ஏழைகளின் ஆப்பிள்-வாழை
வாழைத் தண்டில் புதைந்திருக்கும் மருத்துவ சக்திகள்! அறிந்து கொள்ளுங்கள்.!
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுகின்றது வாழை.உண்மையில் ஆப்பிளை விட ஏராளம் சத்துக்களும் மருத்துவ குணங்களும் கொண்டதுதான் வாழை. அதிலும் வாழைத் தண்டிலிருந்து நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய சத்தக்கள் ஏராளம். அவற்றை எவ்வாறு சமையலிற்குப் பயன்படத்தலாம் என்று பார்ப்போம். வாழைத் தண்டை நாம் பல்வேறு வகையிலும் பயன்படுத்தலாம்.1 வாழைத்தண்டில் சாறு பிழிந்து கலவையாகக் குடிக்கலாம்.2.வாழைத் தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி சம்பல் செய்யலாம்.3.வாழைத் தண்டை பொரியல் செய்து சாப்பிடலாம்.4.வாழைத் தண்டை பருப்புடன் சேர்த்து துண்டுகளாக நறுக்கி அவியவிட்டு சாப்பிடலாம்.!
வாழைத் தண்டின் மூலம் நாம் பெற்றுக்கொள்ளக் கூடிய மருத்துவ அனுகூலங்கள் பல உள்ளன. ஒவ்வொன்றாக பார்க்கலாம்.உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.
சர்க்கரைநோய்க்கு தீர்வு தரக்கூடிய மருந்து!
இது உடலில் இன்சுலினை மேம்படுத்துவதற்கு உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. வாழைத் தண்டினுடைய சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு உயர்வதைத் தடுக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கும்!
வாழைத் தண்டில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுவதால் மலச்சிக்கலுக்கு சரியான தீர்வாக அமையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதைக் கொடுக்கலாம்.
இரத்தசோகை நோயைக் குணப்படுத்தும்!
வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.சிறுநீரகப் பாதையில் கற்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
வாழைத்தண்டு சாற்றில் எலுமிச்சைக் கலவை சேர்த்து சாறாக குடிக்கலாம். இதில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கல்சியக் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
நம் அனைவருடைய வீடகளிலும் வாழை மரம் நிற்கும். ஆனால் அதண் தண்டின் பலன் பலரும் அறியாமலேயே வெட்டிச் சாய்க்கடுகின்றது. நமக்கு இலவசமாகக் கிடைக்கும் இந்த வாழைத் தண்டின் மகிமையை உலகறியச் செய்வோம்.

Ok very nice
ReplyDelete