மொபைலுக்கும் இது சம்மர்தான் பாஸ்... பத்திரமா பாத்துக்கோங்க! #SummerTips




சம்மர் தொடங்கிவிட்டது. ``இங்கு சொல்லாத இடம் கூட கொதிக்கின்றது” என ரிங்டோன் வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த ரிங்டோன் வைக்கும் மொபைல் கூடக் கொதிப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அதிகமாகப் பயன்படுத்தியதால் மொபைல் சூடாவது உண்டு. இந்த வெயிலின் தாக்கத்தால் மொபைல் சூடாகுமா?
நிச்சயம் சூடாகும். அதிகமாக சூடாவது எந்த கேட்ஜெட்டுக்குமே ஒத்துக்கொள்ளாது. மெயின் போர்டையே அதீத வெப்பம் காலி செய்துவிடும். அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்?
சம்மர் மொபைல்

1) சூரியனின் ஒளி நேரிடையாக படும்படி உங்கள் மொபைலையோ கேட்ஜெட்டையோ வைக்காதீர்கள். காரில் செல்லும்போது டேஷ்போர்டில் வைத்தல், விளையாடச் செல்லும்போதோ நீச்சல் குளத்துக்கு செல்லும் போதோ நிழலான இடத்தில் வைத்துவிட்டுச் செல்வீர்கள். ஆனால், திரும்பும்போது அடி தூள் கிளப்பும் வெயில். எந்தச் சூழ்நிலையிலும் மொபைலின் மேல் நேரிடையான வெயில் வேண்டாம்.
2) ஆண்டுக்கு ஒரு மொபைல் வாங்கினால் ஆண்டுக்கு 3 கவர் மாற்றுவோம். அதுவும் மொபைலைப் பாதுகாக்கிறோம் எனத் தடிமனான கவர்களை மாட்டி வைப்போம். அதுவே மொபைல் சூடாகவும் காரணமாக அமையலாம். இரவு நேரத்தில் மொபைல் கவரை கழட்டி வைக்கலாம். மொபைல் சூடானது போலத் தெரிந்தாலும் கவரை கழட்டி வைக்கலாம்.
3) நீண்ட நேரம் பயன்படுத்தாத பொழுது ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை அணைத்து வைக்கலாம். அதிக சேவைகளை நீண்ட நேரம் பயன்படுத்தினாலும் மொபைல் சூடாகும்.
4) விடுமுறைக்காலம் வேறு. அதனால், வீட்டிலிருக்கும் சிறுவர்கள் தொடர்ந்து மொபைலில் கேம்ஸ் ஆடும் வாய்ப்புகள் அதிகம். அப்படி நடந்தால் அவ்வப்போது இடைவெளி விடச் சொல்லுங்கள். இல்லையேல், மொபைல் அதீத சூட்டுக்குள்ளாகி ரிப்பேர் ஆகும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
5) காரை பார்க் செய்துவிட்டு எங்கேனும் போவதாக இருந்தால், மொபைல் மற்றும் கேட்ஜெட்களை கைவசம் எடுத்துச் செல்லுங்கள். அல்லது டேஷ்போர்டின் உள்ளேயோ பைகளிலோ வைத்துவிட்டுச் செல்லவும். மூடிய காருக்குள் இருக்கும்போது மின்னணுப் பொருள்கள் எளிதில் சூடாகும்.
6) இப்போதெல்லாம் ஒவ்வொருவரும் இரண்டுக்கும் மேற்பட்ட மொபைல்கள் வைத்திருப்பது சகஜம். அவற்றை டேபிள் மீது வைக்கும்போதோ பாக்கெட்டில் வைக்கும்போதோ ஒன்றன் மீது ஒன்றை வைக்கக்கூடாது. இதுவே அவை சூடாக வாய்ப்பை உருவாக்கும்.
7) மொபைல் சூடாக இருக்கும்போது சார்ஜில் போட வேண்டாம். கொஞ்ச நேரம் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிடலாம்; அல்லது ஏர்ப்ளேன் மோடில் போடலாம். மொபைல் குளிர்ந்த பிறகு சார்ஜ் போடலாம்
8) பீச்சுக்குப் போவதாக இருந்தால் மொபைலை முடிந்தவரைக் கொண்டுபோக வேண்டாம். அல்லது மொபைலை மணல்புகாத இடமாகப் பார்த்து வைக்கவும். ஒரே பையில் எல்லோருடைய மொபைலையும் வைத்து மூடிவிட வேண்டாம். திரையில் ஸ்க்ராட்ச் விழும் வாய்ப்பும் மொபைல்கள் சூடாகும் வாய்ப்பும் அதிகரிக்கும்.
மொபைல்
9) தினமும் 24 மணி நேரமும் மொபைல் பயன்படுத்தும் ஆளா நீங்கள்? இந்தக் கோடைக்காலத்தில் உங்கள் மொபைலுக்கு அவ்வப்போது ரெஸ்ட் கொடுக்கவும். நம்மைப் போன்றே மொபைலும் ஓவர் டைம் பார்த்தால் டயர்டு ஆகும். கோடைக்காலத்தில் சீக்கிரமே ஆகும்.
குறிப்பாக உள்ளங்கை. அப்படியானால் மொபைலை எடுக்கும் முன் கவனமாக இருங்கள். வியர்வை நீர் உள்ளே போனால்கூட மொபைல் பாதிக்கப்படலாம்.

Comments