கருப்பா இருக்கிறவங்க எந்தெந்த கலர்ல லிப்ஸ்டிக் போட்டா அழகா இருக்கும்?

கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு.... பாடலுக்கு கருப்பாக இருப்பவர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்த பெருமை சேரும். கருமை நிற தோற்றத்தில் இருப்பவர்களை அவமதித்த காலம் மலையேறி விட்டது.
lipsticks
இன்றைய நாட்களில் கருப்பு என்பது கவர்ச்சி, காந்தம், கலை என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. கருப்பாக இருப்பவர்கள் பலர் இன்று திரை உலகில் மின்னும் நட்சத்திர நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற நிறங்களைப் போல்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பான சருமம்

கருப்பான சருமம்

கருமை நிறத்திற்கு ஏற்ற மேக்கப் பயன்படுத்துவதால் அவர்களின் அழகும் மேலும் கூடுகிறது. குறிப்பாக உதடுகளுக்கு பயன்படுத்தும் லிப்ஸ்டிக் ஒருவரின் முக அழகை அதிகரிக்கும். அதே சமயம் முகத்திற்கு பொருந்தாத நிறத்தைக் கொண்ட லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் முக அழகே கெட்டு விடும். கவர்ச்சியான கருமை நிறத்தில் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டிய லிப்ஸ்டிக் நிறங்களை பற்றி இப்போது பார்க்கலாம். இந்த பதிவை தொடர்ந்து படித்து, காந்தக் கருமை நிறம் கொண்டவர்கள் இந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி அவர்களின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கலாம்.
லிப்ஸ்டிக்குகள்

லிப்ஸ்டிக்குகள்

கருமையான சருமம் உள்ளவர்களுக்காகவே சில லிப்ஸ்டிக் நிறங்கள் உள்ளது. இதனை விடுத்து , சில நேரம் கருமை நிறமுள்ள பெண்கள் தவறான தேர்வை செய்து, அழகை வெளிக்காட்ட முடியால் அவ நம்பிக்கை கொள்கின்றனர்.
பொதுவாக பிரவுன் சார்ந்த நிறங்கள் உங்களுக்கு ஏற்றவையாக இருக்கும். இதைத் தவிர வேறு சில நிறங்களும் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். இங்கே குறிபிட்டுள்ள சில நிறங்களை முயற்சி செய்து பாருங்கள்.
காப்பர் பிரவுன்

காப்பர் பிரவுன்

கருமை நிற பெண்களுக்கு காப்பர் பிரவுன் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். காப்பர் ப்ரௌனின் பல ஷேடுகள் இந்த நிறத்துடன் ஒத்து போகும். எல்லா வித ஆடைகளுக்கும் எல்லா இடத்திற்கும் இந்த நிறம் பொருந்தும்.
சிவப்பு

சிவப்பு

உலகளவில் அனைவருக்கும் பிடித்த நிறம் சிவப்பு. கருமை நிற பெண்களை அழகாக, ஈர்க்க வைக்கும் ஹாட்டாக காட்டும் நிறமாக இந்த நிறம் உள்ளது. சிவப்பு நிறத்திற்கு ஏற்ற லிப் லைனரை பயன்படுத்தி, உள்ளுக்குள் சிவப்பு ஷேடை பயன்படுத்துங்கள். இதற்கு மேல் பளபளப்பை கொடுக்கும் விதமாக க்ளிட்டரை சேர்க்கலாம். உங்கள் கருமையான சருமத்திற்கு சிவப்பு நிறம் மேலும் அழகைக் கொடுக்கும். மற்ற எல்லாவற்றையும் மறந்து உங்கள் அழகைப் பற்றி மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள்.
ரோஸ் பிங்க்

ரோஸ் பிங்க்

ரோசின் பல்வேறு ஷேடுகள் உங்கள் சருமத்திற்கு தனித்துவமாக இருக்கும். கோரல் பிங்க் மற்றும் ரோஸ் பிங்கின் மிகவும் லேசான ஷேடுகளை பயன்படுத்திப் பாருங்கள். உலகமே உங்கள் பின்னால் வரும். ரோஸ் நிறத்தில் பல்வேறு ஷேடுகள் கிடைக்கும். ரோஸ் பிங்க் லிப் ஷேடுகளை பயன்படுத்துவதால் மற்றவர்களுக்கு அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவராக அவர்கள் வீட்டு பெண் போல் நீங்கள் தோற்றமளிப்பீர்கள்.
டோபி

டோபி

இது க்ரே மற்றும் சிறிதளவு பிரவுன் கலந்த ஒரு நிறமாகும். நீங்கள் கொஞ்சம் ஆழ்ந்த கருமை நிறம் கொண்டவராக இருந்தால் இந்த நிறம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். கருமை நிற அழகிகளுக்கு பொருத்தமான ஒரு நிறம் இது. இந்த நிறத்தின் மீது க்ளிட்டர் தடவுவதால் ஒரு பார்ட்டி மனநிலை தோன்றும்.
மேஜெந்தா

மேஜெந்தா

ரோஸ் பிங்க் மற்றும் மேஜெந்தா ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ரோஸ் நிறத்தின் லேசான ஷேட் ரோஸ் பிங்க். ஆனால் ரோஸ் நிறத்தின் அடர்ந்த ஷேட் மேஜெந்தா . ஆசிய கருப்பு நிற பெண்கள், ஆப்ரிக்க கருப்பு நிற பெண்கள் ஆப்பிரிக்கா - அமெரிக்க கருப்பு நிற பெண்கள் ஆகியோருக்கு இது மிகவும் ஏற்புடைய நிறமாக இருக்கும்.
ப்யுஷியா

ப்யுஷியா

கருப்பாக இருக்கிறோம் என்ற கவலையை தூக்கி ஓரமாக வைத்துவிட்டு, இந்த அழகான நிறத்தை முயற்சித்து பாருங்கள். இது பர்பிள் மற்றும் சிவப்பு கலந்து ஒரு நிறமாகும். இதன் லேசான முதல் அடர்த்தியான ஷேட் வரை எல்லாவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். கருமையான முகத்தில் இது பல மாயங்களைச் செய்யும். ப்யுஷியா பயன்படுத்தி ஒரு தேவதையைப் போல் வலம் வரலாம் .
சாக்லேட் பிரவுன்

சாக்லேட் பிரவுன்

சாக்லேட் பிரவுன் , காப்பர் பிரௌனை விட வேறுபட்டது. காப்பர் பிரவுன் என்பது லேசான பழுப்பு நிறம். சாக்லேட் பிரவுன் என்பது அடர்த்தியான நிறம். இது கருமையான நிறத்திற்கு அதிகமாக பொருத்தும். பார்ப்பதற்கு ஒரு இயற்கையான நிறத்தைக் கொடுக்கும். மிகவும் எளிமையாக தோன்ற வேண்டுமானால் நீங்கள் இந்த நிறத்தை தேர்வு செய்யலாம். அதே சமயம் மிகவும் ட்ரெண்டியாக, உயர்ந்த ரகமாக தோற்றமளிக்கும்.
பீச்

பீச்

வெண்மை நிறமானவர்கள் பொதுவாக பிங்க் நிறத்தை பயன்படுத்துவார்கள். அதே போல் கருமையானவர்கள் பலரும் தேர்வு செய்யும் நிறம் பீச். இது ஒரு ராயல் லுக்கை தருகிறது. எல்லா வித அடர் நிறங்களுக்கும் இந்த பீச் நிறம் பொருந்தும். சந்தேகமே இல்லாமல், பீச் நிறம் கருப்பு அழகிகளுக்கான ஒரு நிறமாக உள்ளது.
வெண்கலம்

வெண்கலம்

இது உலோக ஷேடை தரும் ஒரு நிறமாகும். கருப்பு பெண்களுக்கு ஒரு நல்ல நிறமாக இருக்கும். மிகவும் அடர்த்தியாக இல்லாமல், நேர்த்தியான அழகைத் தரும். ஆடம்பரமாக இல்லாமல், மிகவும் இயற்கையாக தோற்றமளிக்க இந்த நிறத்தை தேர்வு செய்யலாம். பகல் நேரம் மற்றும் மாலை நேரத்திலும் இந்த நிறத்தைப் பயன்படுத்தலாம். இரவு நேரங்களில் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவது நல்லது.
நியூடு

நியூடு

எளிமையாக, மென்மையாக , முறையாக லிப்ஸ்டிக் போட வேண்டும் என்று நினைத்தால் , ரேம்பில் நடக்கும் திவா போன்ற ஒப்பனையை தேர்வு செய்ய விரும்பினால் , உங்களுக்கு ஏற்ற நிறம் ந்யுடு . வெண்கலம் மற்றும் ந்யுடு ஆகியவற்றை இணைத்து பயன்படுத்தினால், உங்கள் தோற்றத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைப் பெற முடியும். வெண்கல நிற லைனெர் பயன்படுத்தி, உள்ளே ந்யுடு நிறத்தைப் பயன்படுத்தலாம்.
பீச் வேறு ஆரஞ்சு வேறு, நியூடு வேறு, காப்பர் வேறு. இந்த வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்ற சிறந்த ஷேட் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தி ஒரு ராஜகுமாரியாக வளம் வாருங்கள்

Comments