ணநீக்க நடவடிக்கை, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், நியுட்ரினோ, ஜி.எஸ்.டி., விவசாயிகளின் டெல்லிப் போராட்டம்... என மத்திய அரசுக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை நடந்த எந்தப் போராட்டங்களுக்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இப்படியான நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு அதற்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது.
ஆனாலும், மத்திய அரசு இதுவரை எந்தமுடிவும் தெரிவிக்காமல் உள்ளது. இதன் காரணமாக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீவிரமாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 31-ம் தேதி தி.மு.க சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சென்னை வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காட்ட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அது குறித்து மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு சில கேள்விகள் கேட்டோம். 

Comments