LOVE HOUSE

                                   காதல் இல்லறம்



சுமாரான அழகி நான்...-ஆனால்
என்னவரின் கண்களுக்கு மட்டும்
சூப்பரான அழகி!


அதிகம் பயிலவில்லை நான்...-ஆனால் 
என்னவரிடம் பயின்றதுதான்
அதிகம்! 

கோபத்தில் சிவந்ததில்லை நான்...-ஆனால்
என்னவரோடு ஊடல் கொள்வதில்
சாகசகாரி!

கவிதையை ரசித்தவள் இல்லை நான்...-ஆனால்
என்னவரின் கவிதைகளுக்கு
முதல் வாசகி!

அன்பானவள்தான் நான்...-ஆனாலும்
என்னவரின் அன்பில்
மிதந்ததுண்டு! 


கலவி அறிந்ததில்லை நான்...-ஆனால்
என்னவரோடு...கலவியில்
திளைத்ததுண்டு!


காதலித்தவள் இல்லை நான்...-ஆனால்
என்னவரை காதலிக்கிறேன்...
வாழும் நாள்வரை!

               -கிருத்திகா சரவணன்.

Comments